நுகர்வோர்கள் கடைகளில் தாங்கள் வாங்கும் பொருட்களை நியாயமான விலையில், சரியான அளவில் பெறுவதற்கு உரிமைகள் உண்டு. இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சுரண்டலுக்கு எதிராக நுகர்வோரை பாதுகாக்கும் வகையிலும், ஆண்டுதோறும் மார்ச் 15-ம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1983 மார்ச் 15-ம் தேதி முதல் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.