தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (மார்ச். 15) தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமைச்சர் அறிவித்தார். ஒவ்வொரு திட்டத்திற்கும் அதற்கான நிதிகளை ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார். அந்த வகையில் வேளாண் துறைக்கு மொத்தம் ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.