சென்னை மந்தைவெளி அருகே ஆசிரியை ஒருவர் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாததால், தற்கொலை செய்துகொண்டார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த மாளவிகாவுக்கு (38), அவரது பெற்றோர் தொடர்ந்து வரன் தேடி வந்துள்ளனர். திருமணம் வேண்டாம் என அவர் கூறிவந்த நிலையில் மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (மார்ச் 14) காலை அங்கிருந்த அடுக்குமாடி கட்டடத்தின் 9ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.