17,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்

79பார்த்தது
17,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்
TN வேளாண் பட்ஜெட்: 17,000 விவசாயிகளுக்கு ரூ.215.80 கோடியில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். பட்ஜெட் உரையில் மேலும் அவர், சிறு, குறு விவசாயிகளின் பயனிற்காக ரூ. 10.50 கோடியில் 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். விவசாயிகள் குறைந்த வாடகையில் இயந்திரங்கள் பெற ரூ. 17.37 கோடியில் இ-வாடகை செயலி மூலம் 5,000 வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி