இபிஎ​ஸ் ஆலோசனை கூட்டத்தை இன்றும் புறக்கணித்த செங்கோட்டையன்

61பார்த்தது
இபிஎ​ஸ் ஆலோசனை கூட்டத்தை இன்றும் புறக்கணித்த செங்கோட்டையன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு வருவதற்கு முன்னர், இபிஎஸ் தலைமையில் எம்எல்ஏ-களுடன் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துவிட்டு, சபாநாயகர் அறையில் காத்திருந்தார். நேற்று (மார்ச் 14) நடந்த கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இபிஎஸ், செங்கோட்டையன் இடையே ஏற்படும் உரசல் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி