திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது பொய்யா? அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது பொய்யா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டினருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.