ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி இன்று (மார்ச்.09) துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடக்கிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து பலப்பரீச்சை மேற்கொள்கின்றன. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியை சேர்த்து 15 முறை தொடர்ச்சியாக ரோகித் ஷர்மா டாஸ் தோற்றுள்ளார். இதன் மூலம் ODI கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக டாஸ் தோற்ற (12) கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான சாதனையை ரோஹித் ஷர்மா செய்துள்ளார்.