தமிழ்நாட்டில், “நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்தவர்கள். அதனை கடைபிடித்து சிறந்து விளங்கும் 3 பேருக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், 2ஆம் பரிசாக ரூ.1.5 லட்சமும், 3ஆம் பரிசாக ரூ. 1 லட்சமும் வழங்கப்படும்” என உழவர் நலத்துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், “1 லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.