ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.. பிரதமர் மோடி வாழ்த்து

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிப் பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜூனியர் ஆசிய ஆக்கி சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு இது ஒரு வரலாற்று தருணம். இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி