ரயில் தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்குவதற்காக இந்திய ரயில்வே 'IRCTC சூப்பர் ஆப்' என்கிற புதிய ஆப்பை வடிவமைத்துள்ளது. இதற்கு முன்பு தனித்தனி தளங்களில் கிடைத்த பல சேவைகளை இந்த ஆப் ஒன்றாக இணைக்கிறது. டிக்கெட் முன்பதிவு, பிளாட்பார்ம் முன்பதிவு, கேட்டரிங் சர்வீஸ், சரக்கு போக்குவரத்திற்கான முன்பதிவு, PNR நிலை சரிபார்ப்பு, அட்டவணை மாற்றம், UPI மற்றும் பிற கட்டண முறைகளை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.