நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அம்பேத்கரை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது X தள பதிவில், பல ஆண்டுகளாக அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் அவமதித்தது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அம்பேத்கருக்கு நடந்த அவமதிப்புகளை அமித்ஷா தரவுகளுடன் கூறியதால், காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். எனவே அதை மறைக்க பார்க்கிறார்கள். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.