இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்த பிறகு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, “கிரிக்கெட் பந்தை வைத்து நீங்கள் செய்யும் அற்புதங்களும், தெளிவான சிந்தனையும், டெஸ்ட் கிரிக்கெட் மீதான அபரீத அன்பும் என்றும் எங்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கும். நீங்கள் எண்ணற்ற சந்தோஷங்களையும் பெருமையையும் இந்தியாவுக்கு கொடுத்துள்ளீர்கள். அடுத்த அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள். Take a bow, Ashwin bro என எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.