பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடியை தாண்டியது

பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி, உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 67 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. 1069 வெளிநாட்டு கரன்சிகள், 1012 கிராம் தங்கம், 17062 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி