தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கரடி தாக்கியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரவிலக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சென்றாய பெருமாள் மனைவியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டிற்கு காய்கறி வாங்க சென்றபோது அவரை கரடி தாக்கியுள்ளது. கண்களை குறிவைத்து தாக்கியதில் நிலைகுலைந்த அவர் உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.