ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை முதல் முறையாக இழந்தது. 2019-21 மற்றும் 2021-23 ஆகிய இரு முறையும் தொடர்ச்சியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வி சந்தித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.