சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை ஒட்டி பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பட்டாவை வாங்கி வைத்த பின்னர் மாணவிகள் அனுமதிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாணவிகளிடம் மீண்டும் துப்பட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.