கேரளாவின் எர்ணாகுளம் பரவூரில் கல்லூரி விடுதியின் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்து மருத்துவ மாணவி உயிரிழந்தார். சாலக்கா எஸ்என்ஐஎம்எஸ் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த மாணவி பாத்திமா ஷஹானா என்பவர், சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென தவறி விழுந்துள்ளார். தலையில் படுகாயமடைந்த மாணவியை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.