நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் தொடரும் கருத்து மோதல்களால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முக்கிய நிர்வாகிகள் இரு குழுக்களாக பிரிந்து செயல்படுவதால் யாருடன் செல்வது என தெரியாமல் புதிய தொண்டர்கள் குழம்பியுள்ளனர். மாவட்ட செயலாளர் சுகுமாறன் மற்றும் புதிதாக இணைந்த சேகர் இடையே போட்டி நிலவுகிறது. நாகை மாவட்ட செயலாளர் புகைப்படம் இன்றி மற்றொரு பிரிவினர் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேகர் தலைமையில் பேரணியும் நடத்தப்பட்டுள்ளது.