திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு கட்டாய கருத்தடை செய்ததாக உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இந்த கருத்தடை அமைப்பு தற்காலிகமானதுதான், தேவையில்லை என்றால் அகற்றலாம். அனுமதி இல்லாமல் எவருக்கும் கருத்தடை செய்யப்படுவது இல்லை. தாய் சேய் உடல் நலன் கருதி மத்திய அரசின் திட்டத்தின் மூலமே கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது என கூறியுள்ளது.