சிதம்பரம் அருகே சாலை விபத்தில் பெண் போலீஸ் எஸ்.ஐ. மற்றும் அவரது கணவர் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். குமராட்சி காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக உள்ள இளவரசி (28) அவரது கணவர் கலைவேந்தனுடன் (30) இன்று (ஜன.05) காலை பைக்கில் சென்ற போது எதிரே வந்த டவுன் பஸ் மற்றும் பைக் மோதி விபத்து நடந்துள்ளது. இருவருக்கும் திருமணமாகி 2 மாதங்களே ஆகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.