இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. 5வது டெஸ்ட்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. இதில் அதிக ஸ்கோர் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் பும்ரா பந்து வீசாதது போன்றவை தோல்விக்கு வழிவகுத்தது. 162 என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.