நடப்புச் சாம்பியன் கேகேஆர் ஆர்சிபி அணிக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்ற ஆர்சிபி பௌலிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய கேகேஆர் பேட்டர்களை ஆர்சிபியின் ஸ்பின்னர்கள் கட்டுப்படுத்தினர். கேகேஆர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரகானே 56, நரைன் 44, ரகுவன்ஷி 30 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி சார்பில் க்ருணால் 3, ஹேசில்வுட் 2, சூயஸ், தயாள் மற்றும் ரஷிக் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.