கிபி 16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அதன் அடிப்பகுதியில் சாம்பல் நிறத்தால் ஒரு உலோகம் படிந்திருந்தது. அதுதான் ‘கிராபைட்’. ஆங்கிலேயர்கள் கிராபைட் கட்டிகளை சிறு துண்டுகளாக வெட்டி எழுத பயன்படுத்தினர். வெளி உலகத்திற்கும் விற்பனை செய்தனர். பின்னர் இதற்கு 'பென்சில்' என்ற பெயர் வந்தது. லத்தீன்மொழியில் 'தரமான பிரஷ்' என்பதற்கு பென்சிலியம் என்று பெயர். அதுவே சுருங்கி 'பென்சில்' ஆனது.