அமெரிக்காவில் 4 மாத குழந்தை காரில் இருப்பதை மறந்து வகுப்புக்குச் சென்ற தந்தை, மூச்சுத் திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையை பராமரிப்பாளரிடம் விட மறந்து, காரில் வைத்து பூட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றுள்ளார். குழந்தை வரவில்லை என பராமரிப்பாளர் கூறிய பிறகே, அவருக்கு ஞாபகம் வந்துள்ளது. இதனையடுத்து தந்தை போலீசில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.