ஜப்பான்: மருத்துவ போக்குவரத்து ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று (ஏப்.06) நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிச் சென்றபோது ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், மருத்துவர், நோயாளி மற்றும் பராமரிப்பாளர் உயிரிழந்த நிலையில், விமானி, ஹெலிகாப்டர் மெக்கானிக் மற்றும் செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டனர்.