வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து ரூ.2000 பணம் கேட்டு மிரட்டிய போதை ஆசாமி நாகராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை ஜாம்பஜாரில் உள்ள வீட்டில் தனியே வசித்து வரும் 80 வயதுடைய மூதாட்டியை மதுபோதை ஆசாமி வீடுபுகுந்து கொலை செய்திடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். தற்போது மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.