ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் புதிய ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த புதிய ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு தற்போது வழங்கப்படும் மகாத்மா காந்தி வரிசை தாள்களை போன்று இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.