எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவுடன் எந்த உறவும் இல்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை ஏன் சந்தித்தார்? அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி இரண்டு மணி நேரம் பேசியுள்ளார், என்ன நிர்பந்தம் என்று தெரியவில்லை. அரசியல் ரீதியாக அரசுக்கு நெருக்கடி தரப்படுகிறது. அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது என முத்தரசன் கூறியுள்ளார்.