எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த கோயில்

அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு, கோயில்களில் விதவிதமான அபிஷேகம் செய்யப்படும். ஆனால், கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இத்தலத்தில் சுவாமி, மணல் லிங்கமாக இருப்பதால், அபிஷேகம் செய்யப்படுவதில்லை. எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த இந்த ஸ்தலத்தில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

தொடர்புடைய செய்தி