விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வருக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 வயது பள்ளி மாணவி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில், பள்ளியின் தாளாளர், முதல்வர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் வரும் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.