கொலை வழக்கில் 2 சிறார்கள் உட்பட 7 பேர் கைது

தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்த தாமோதரன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக் கருப்பணசாமி கோயில் பகுதியில் குளிக்கும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பிரவீன்குமார், ஹரீஸ் பிரவீன், விஜயபாரதி, அன்புச்செல்வம், புவனேஸ்வரன் மற்றும் 2 சிறார்கள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி