திருச்சி மாவட்டம் ஓலையூரில் மின்வாரிய ஊழியர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி ஒயர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. நொடியில் நடந்த இந்த சம்பவத்தில் மின்வாசிய ஊழியர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்சாரம் நிறுத்தப்பட்டு அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.