இந்த பழனிசாமி சிரிச்சிட்டே இருப்பேன்னு நினைக்காதீங்க
தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, மோடியிடம் பல்லை காட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி சிரித்துக்கொண்டுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி இன்றைய தூத்துக்குடி பிரச்சார கூட்டத்தில் யார் பல்லை காட்டுகிறார்கள் நீங்கள்தான் பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளீர்கள் என கூறியிருந்தார். மேலும் இந்த பழனிசாமி எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க மாட்டேன். நான் வாயை திறந்தாள் என்ன ஆகும் என்று தெரியாது என கூறியுள்ளார்.