'சூரரைப் போற்று’ படத்திற்குப் பிற
கு சசூர்யா- சுதா கொங்கரா இணைந்துள்ள படம் ‘புறநானூறு’. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் பட அறிவிப்பு வந்து பல நாட்கள் ஆகியும் எந்தவித அப்டேட்டும் இன்றளவில் வரவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து
சூர்யா விலக முடிவெடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். காரணம் இந்த கதைக்களத்தில் இந்தி எதிர்ப்பு குறித்த காட்சிகளும், குறிப்பிட்ட ஒரு கட்சியை எதிர்க்கும் காட்சிகளும் இடம்பெறும் என கூறப்படுகிறது. எனவே இதில் நடிக்க
சூர்யா தயக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவோ இதுகுறித்து எந்த மூச்சும் விடாமல் உள்ளது.