உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில்
ஹோலி பண்டிகையன்று சீக்கியர் ஒருவருக்கு வண்ணம் தீட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு கும்பல் சீக்கியர் மீது வண்ணம் தீட்ட முயன்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் வலுக்கட்டாயமாக அவர் மீது வண்ணத்தை பூசி, அவரது தலைப்பாகை கழற்றி வீசினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.