திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 19ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பழுதடைந்த உதிரி பாகங்கள் மாற்றப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் ரோப்காரில் உள்ள 8 பெட்டிகளுக்கும் புதிய
வண்ணங்கள் தீட்டும் பணி நடைபெற்றது. நேற்று காலை ரோப்காரில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தில் போது பெட்டிகள் சீரான முறையில் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இயங்குகிறதா? என சரி பார்க்கப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் சான்றிதழ் அளித்து ஓரிரு நாளில் ரோப் கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும்.