திருச்சி
ஹோலி கிராஸ் கல்லூரியின் 100 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் பங்கேற்றார். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர் "உங்களுடைய கனவை நோக்கி நீங்கள் பயணித்து இலக்கை அடைவது தான் அடுத்த தலைமுறை பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு" என்றார். மேலும் "பெண்கள் என்றால் கண்டிப்பாக டிரஸ் கோடு ஏன் இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. மாறாக ஆண்களை சரியாக வளர்க்க வேண்டும், ஒரு பெண் என்ன உடை உடுத்திக் கொண்டாலும் நீ சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.