
சிவகாசி: தீப்பெட்டி தொழிலுக்கு 100 வது ஆண்டு விழா
விருதுநகர் மாவட்டம், கந்தக பூமியான சிவகாசி கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் வறண்ட நிலை காணப்பட்டு வந்த நிலையில் அய்யநாடார் மற்றும் சண்முகநாடார் இணைந்து கல்கத்தாவில் தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொண்டு சிவகாசி மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் சிவகாசியில் பல கிராமங்கள் மற்றும் நகரப்புறங்களில் தீப்பெட்டி ஆலைகளை தொடங்கி கந்தக பூமியில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து உதவினர். மேலும் தீப்பெட்டி தொழில் தொடங்கி நூறு ஆண்டுகள் ஆகிய நிலையில் நாளை பிப்.15 ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தீப்பெட்டி தொழிலுக்கு நூற்றாண்டு விழா என்ற தலைப்பில் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் தீப்பெட்டி தொழில் செய்யும் உரிமையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.