சிவகாசி: நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம்

67பார்த்தது
லிருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் திருத்தப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 2019 குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) தாகஸ்தீஸ்வரன் தலைமையில், குடிமை பொருள் வழங்கல் தனி வருவாய் ஆய்வாளர் கோட்டையராஜ் முன்னிலையில் பயிற்சி நடைபெற்றது. மேற்படி பயிலரங்கத்தில் உபயோகிப்பாளர் உரிமை கமிட்டி தலைவர் முகமது எஹியா மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு திருத்தப்பட்ட-2019 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினர். 

சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி