சிவகாசி: தைபூச தங்கத்தேரோட்ட விழா - திராளான பக்தர்கள் பங்கேற்பு

61பார்த்தது
சிவகாசி: தைபூச தங்கத்தேரோட்ட விழா - திராளான பக்தர்கள் பங்கேற்பு
சிவகாசி ஸ்ரீசிவசுப்பிரமணியர் கோவில் தங்கத் தேரோட்டம் கோலாகலம். இன்று இரவு, தெப்பத் தேரோட்டம். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தைப்பூசத் திருவிழா உற்சாகமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக சங்கத்திற்குச் சொந்தமான ஸ்ரீசிவசுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தைப்பூசம் திருநாளை முன்னிட்டு பிப். 11 நேற்றிரவு, ஸ்ரீசிவசுப்பிரமணியர் - ஸ்ரீதெய்வானை-ஸ்ரீவள்ளி சமேதராக தங்கத்தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று உற்சாகத்துடன் கோஷமிட்டு தேரிழுத்தனர். சிவகாசியின் நான்கு ரத வீதிகளிலும் தங்கத்தேர் கோலாகலமாக வலம் வந்தது. 

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்தேரோட்டம் நிகழ்ச்சி இன்று இரவு, செண்பக விநாயகர் கோவில் தெப்பத்தில் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிவகாசி இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக சங்க நிர்வாகிகள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you