சிவகாசி உள்ளிட்ட பல்வேறு யூனியன்களில் பிடிஓக்கள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பிடிஓவாக (கி.ஊ) இருந்து வந்த சிவக்குமார், ராஜபாளையம் பிடிஓவாக (வ.ஊ) பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகாசி பிடிஓவாக (கி.ஊ) வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய மீனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபாளையம் பிடிஓ ஜெயராமன் (வ.ஊ) காரியாபட்டிக்கும் காரியாபட்டி பிடிஓ (வ.ஊ) வாசுகி நரிக்குடி பிடிஓவாக (கி.ஊ) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நரிக்குடி பிடிஓ (கி.ஊ) சண்முகப்பிரியா வெம்பக்கோட்டை பிடிஓவாகவும் (கி.ஊ) வெம்பக்கோட்டை பிடிஓ (கி.ஊ) செல்வகுமார் நரிக்குடி பிடிஓவாக (வ.ஊ) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நரிக்குடி பிடிஓ (வ.ஊ) சத்தியசங்கர் விருதுநகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் பிடிஓ ராமமூர்த்தி வத்திராயிருப்பு பிடிஓவாக (வ.ஊ) மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.