சிவகாசியில் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ் கடவுள் முருகனை சூரிய ஒளி மூலமாக ஓவியம் வரைந்து அசத்தி கார்த்திக் என்ற இளைஞர்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவர் தற்போது சூரிய ஒளி மற்றும் கண்ணாடி லென்ஸ் மூலமாக ரப்பர் பலகையில் நடப்பு முக்கிய சம்பவங்கள், விளையாட்டு வீரர்கள் சாதனைகள், சினிமா நட்சத்திரங்களின் படங்களை ஓவியமாக சூரிய ஒளி மூலமாக வரைந்து வருகிறார். இந்த நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ் கடவுள் முருகனை சூரிய ஒளி மூலமாக வரைந்து அசத்தியுள்ள கார்த்திக் இதை வரைவதற்கு தொடர்ந்து 5 நாட்கள் ஆனதாக தெரிவித்துள்ளார்.