சிவகாசி: காகித லாரியில் பயங்கர தீ விபத்து....

84பார்த்தது
சிவகாசியில் காகித லாரியில் பயங்கர தீ விபத்து- பல லட்ச ரூபாய் மதிப்பிலான காகிதம் எரிந்து சேதம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி முஸ்லீம் தெருவில் உள்ள அக்கீல் என்ற அச்சக நிறுவனத்திற்கு சொந்தமான அலுமினிய காகித தாள்களை மறுசுழற்சி செய்வதற்காக லாரியில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிப். 11 அதிகாலையில் லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேர பணியில் இருந்தவர்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை அணைக்கும் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காகித தாள்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. மேலும் லாரியின் ஒரு பகுதி எரிந்து சேதமானது. மர்ம நபர்கள் லாரிக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி