விருதுநகர் மாவட்டம், சிவகாசி இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக சங்கத்திற்கு சொந்தமான ஸ்ரீசிவசுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தைப்பூசம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்தேரோட்டம் நிகழ்ச்சி நேற்றிரவு (பிப். 12), செண்பக விநாயகர் கோவில் தெப்பத்தில் நடைபெற்றது.
தெப்பத் தேரில் ஸ்ரீசுப்பிரமணியர் - ஸ்ரீதெய்வானை - ஸ்ரீவள்ளி சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். தெப்பத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.