சிவகாசி: டேக்வாண்டோ போட்டி; முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

71பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான டேக் வாண்டோ போட்டி அந்த தனியார் பள்ளியில் நடைபெற்றது. 

போட்டியில் மாவட்டத்தின் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். போட்டியை முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி துவக்கிவைத்தார். இதில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மினி சப் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர், ஜூனியர் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன. 

போட்டிகளில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களை பாராட்டி கௌரவிக்கும் விதமாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்று, மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார். மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் முதலிடம் வகித்தவர்கள், மாநிலங்களுக்கிடையே தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் தமிழக அணிக்காக விளையாட  பரிந்துரைக்கப்படுவார்கள் என போட்டிகளின் தெரிவிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி