5 காய்கறிகளை உணவில் சேர்ப்பது எடையை குறைப்பதோடு உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக USDA தெரிவித்துள்ளது. இந்த காய்களில் கலோரிகளின் அளவும் மிக குறைவு. இந்த காய்கறிகளை டயட்டில் சேர்த்தால் சில நாட்களில் உடல் எடையை குறைக்கலாம். பீட்ரூட், பசலைக் கீரை, முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, சீமை சுரைக்காய் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் ஜிம் போகாமல் உடல் எடையை குறைக்க முடியும்.