விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதில் அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை. எந்த தலைவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும் மத்திய அரசு CRPF பாதுகாப்பு கொடுக்கும். அவர்கள் பாஜக சார்ந்தவர், சாராதவர் என்ற பேச்சே இல்லை விஜய் ஆளுநரை சந்திக்க வருவதில் சிக்கல், பரந்தூர் மக்களை சந்திக்க செல்வதில் பிரச்சனை. இன்று இவ்வளவு பேசும் மாநில அரசு அன்று விஜய்க்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.