வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இனி உங்களின் வாட்ஸ்அப் கணக்கையும், இன்ஸ்டாகிராம் கணக்கையும் இணைத்துக் கொள்ளலாம். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய அப்டேட் காரணமாக பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் கணக்குகளுடன் இன்ஸ்டாகிராமை தங்கு தடையின்றி பகிர்ந்து கொள்ள முடியும். இந்த புதிய அம்சம் ஐஓஎஸ் செயலியில் சமீபத்திய பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ளது. எனினும் இது சோதனை ஓட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.