சிவகாசி: தனியார் பேருந்து மோதி முதியவர் பலி...

68பார்த்தது
சிவகாசி அருகே பயங்கரம், தனியார் பேருந்து மோதி முதியவர் பலி. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து விருதுநகர் நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து திருத்தங்கல் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த கங்காகுளத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் (55) என்பவர் நிலைத்தடுமாறி பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். பேருந்து அதிவேகத்தில் சென்றதால் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிவு பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி