சூலக்கரை மேட்டு பகுதியில் சைக்கிள் சென்ற நபர் மீது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியைச் சேர்ந்த நியாயாதிபதி என்பவர் தனது சைக்கிளில் சூலக்கரை மேட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மணிகண்டன் என்பவர் டிப்பர் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து சைக்கிளில் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த நியாயாதிபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சூலக்கரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.